Friday, 14 February 2014

yadavas


மாவீரன் அழகுமுத்து கோன்


அழகுமுத்து கோன் வாரிசுக்கு வீரவணக்கம்


 வீரவணக்கம் ! வீரவணக்கம் ! வீரவணக்கம் ! அய்யா சிவத்தசாமி அவர்கள் அகால மரணம் அடைந்தார் என்பதை வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன். அய்யா ஆத்மா பூரண அமைதி பெற இறைநிலையிடம் பிரார்த்தனை செய்கிறேன் . அனைவரும் அழகுமுத்துக் கோன் வாரிசு அய்யா சிவத்தசாமி அவர்களை ஆத்மா பூரண அமைதி பெற பிரார்த்தனை செய்யுங்கள் . என் வீரவணக்கம் ! வீரவணக்கம் ! வீரவணக்கம் ! வீரவணக்கம் ! வீரவணக்கம் ! வீரவணக்கம் ! வீரவணக்கம் !

ஆய் மன்னர்கள்


கோனார்


கிருஷ்ண ஜெயந்தி



கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு. தென்னகத்தில் `கோகுலாஷ்டமி' என்றும், வட இந்தியாவில் `ஜென்மாஷ்டமி' என்றும் இது அழைக்கப்படுகிறது. எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார்.

அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று,ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் சிறைக்குள் வசுதேவர்-தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணன் அவதரித்தார். பிறந்தபோது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் கிருஷ்ணன் காட்சியளித்தான்.

பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க சாதாரணக் குழந்தை வடிவானான். மூன்று வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும், 8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணனின் இளம் வயது கழிந்தது.

தனது ஏழாவது வயதில் கம்சனை வீழ்த்தி, பெற்றோரையும் விடுவித்தான் கிருஷ்ணன். அவதாரங்களுள் ஒருவரான `ஸ்ரீ கிருஷ்ண பகவானின் ஜென்மாஷ்டமி வரும் 1-ந்தேதி சிறப்பாக கொண்டாடப்படவிருக்கின்றது. அன்று மக்கள் இனிப்புகள், காரங்கள் செய்து குறிப்பாக சீடை வகைகள் பல செய்து கண்ணனுக்கு நிவேதனம் செய்து மகிழ்வர்.

அரிசி மாவினால் கண்ணனின் காலடிகளை இட்டு கோபாலனை தத்தம் இல்லங்களுக்குப் பெண்கள் அழைப்பர். அன்று பல கோவில்களில் "உறியடி'' திருவிழா நடைபெறும். மங்களகரமான இந்நாட்களில் ஜகத்தில் உள்ள பக்தர்களுக்கு (மக்கள் அனைவருக்கும்) நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கிருஷ்ண பரமாத்மா அருள நாம் அவரை "கீத கோவிந்தம்'', "ஸ்ரீமந் நாராயணீயம்'', "ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம்'' போன்ற பல ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்குவோம். "ஆயர்பாடி கண்ணனை ஆராதிப்போம்!

வழிபாட்டு முறை:

கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டில் மாலை 6 மணிக்கு கண்ணனின் படத்தை அலங்கரித்து நெய் விளக்கு ஏற்ற வேண்டும். குழந்தைகளை கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரிக்க வேண்டும்.

தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு போன்ற பூஜை பொருட்களுடன் கண்ணனுக்கு பிடித்தமான சீடை, முறுக்கு, தட்டை, லட்டு, அதிரசம், முந்திரி, பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ கலந்த கோதுமை பொங்கல், இனிப்பு பூரி, மோர் குழம்பு, ரவா லட்டு, தேன்குழல், சர்க்கரை கலந்த வெண்ணை, பாசிப் பருப்பு பாயாசம் போன்ற பிரசாதங்களை படைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

"ஊரில் உள்ள அத்தனை குழந்தைகளையும் கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரித்து கோவிலுக்கு அழைத்து செல்வார்கள். ஆடல்-பாடல் கோலாட்ட நிகழ்ச்சிகள், குழந்தைகள் ஆடுவதை பார்க்கும் போது கண்ணன் ஒவ்வொரு கோபியர்களிடமும் ஆனந்த நடனம் ஆடிய தீராத விளையாட்டு பிள்ளையை நினைவுபடுத்தும். இவ்வேடமிட்ட குழந்தைகள் புத்திசாலியாக செயல்படுகிறார்கள்.

கண்ணனின் பரிபூரண அருள் இந்த குழந்தைகளுக்கு கிடைக்கிறது. பலன்கள்: கிருஷ்ண ஜெயந்தியில் கண்ணனை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகிழ்ச்சி தங்கும், அகந்தை அகலும், மூர்க்க குணம் குழந்தைக்கு ஏற்படாது. தர்மசீலராக இளைஞர்கள் வருவார்கள். அரசியல் ஞானம் உண்டாகும். நிர்வாக திறன் அதிகரிக்கும்.

மாமனார் வழியில் சொத்துக்கள் கிடைக்கும். திருமணத் தடைகள் அகலும், செல்வம் பெருகும்.வயல்களில் விளைச்சல் அதிகரிக்கும், ஆடு, மாடுகள் பல்கி பெருகும், கடன் தீரும், பகைமை ஒழியும், நண்பர்கள் கூட்டு தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். புகழ் கூடும். அமைதி நிலவும், ஆற்றல் பெரும், வறுமை இல்லா வாழ்வு அமையும்.

வழிபாடு செய்யும்போது கோவிந்தா என்று அழைத்து வழிபாடு செய்தால் அதிக பலன்களை பெறலாம். அதன் பொருள் பசுக்களின் தலைவன் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவன். பூமியை தாங்குபவர். வேண்டுவதால் அடையக் கூடியவன் என்பதாகும்.இதனால்தான் ஆதிசங்கரரும், பஜகோவிந்தம் பாடுங்கள் அது மரண பயத்தை போக்கும் மந்திரம் என்றார்.


கிருஷ்ண ஜெயந்தி வழி பாட்டை வீட்டில் குழந்தைகளுடன் கொண்டாடும் போது கிருஷ்ணரின் கதைகளை சொல்லி வழிபட்டால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். ராஜதந்திரம் அதிகரிக்கும், அரசியல் சாணக்கியத் தன்மை அதிகரிக்கும். பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்திசாலித்தனம் கூடும். எளிமையாகவும், சுருக்கமாகவும், புரிந்து கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும்.

பெண்கள் அரசியலில் சிறந்து விளங்க இவ் வழிபாடு மிகவும் சிறந்த வழிபாடு என்கிறார் சென்னை அரும் பாக்கத்தைச் சேர்ந்த ஜோதிடர் சாமி நடராஜன்.

திருமண தடை நீங்கும்:

அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே இப்பாடலை பாடிய ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் மடியில் கண்ணன் அமர்ந்து பாடல்கள் கேட்பானாம். அதனால் அவர் தொடையை தட்டி தாளம் போடாமல் பாடுவாராம். அத்தகை சிறப்புமிக்க இந்த ஊத்துக்காட்டில் காலிங்க நர்த்தனனாக இருக்கும், கண்ணனை வழிபடுவதன் மூலம் பகையை வெல்லலாம்.

எதிரிகள் அஞ்சிடுவர், நாகதோஷம் நீங்கும், திருமண தடை நீங்கும்.இவ்வாலயம் கும்பகோணத்தில் இருந்து ஆவூர் வழியாக தஞ்சை செல்லும் சாலையில் ஊத்துக்காட்டில் உள்ளது. காம தேனு இறைவனின் அழகை கண்டுகளித்து இசையில் நனைந்த இடமான தேனு சுவாசபுரம் என்று அழைக்கப்பட்ட மூச்சுக்காடு எனும் ஊத்துக்காடு ஆகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இவ்வாலயம் சென்று வழிபட்டு வரமேன்மை காண்பார்கள்.

கண்ணன் பிறந்த மதுராவில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. யமுனை கரையோரம் கண்ணன் விளையாண்ட கேசியார்ட், கோவர் தனன் ராதை பிறந்த பட்சனா மகாபன் கோகுலம், நந்தி கிராமம் என்ற இடங்களில் மிகவும் பிரமாண்ட முறையில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.நாமும் கிருஷ்ண ஜெயந்தி அன்று நம் வீடுகளில் கண்ணனை அழைத்து வழிபட்டு ஏராளமான பலன்களை பெற்றிடுவோம்.

யது வம்சம்


கலித்தொகை கூறும் பாண்டியர்கள்

முல்லை நிலத்து ஆயர் பாண்டியர்களோடு பிறந்த குடியினர் எனக் கலித்தொகைக் கூறுகின்றது.

"மலிதிரை யூர்ந்து தன் மண்கடல் வெளவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார் நாடிடம் படப்
புலியோடு வில் நீக்கிப் புகழ் பொறித்த கிளர்க்கெண்டை
வலியினான் வணங்கிய வாடா சீர்த்த தென்னவன்
தொல்லிசை தட்ட குடியொடு தோன்றிய நல்லினத்தாயார்".

ஆதாரம்: கலித்தொகை முல்லைக்கலி

கடல்கோளினால் தன்னுடைய நிலப்பகுதி அழிவிற்கும் அஞ்சாது தம் பகைவர்களான சோழர்களையும் சேரர்களையும் முறியடித்து தனது "மீன்" கோடியை பொறித்த புகழையும், வலிமையையும், பகைவர்களை வணங்கச் செய்தவனும் ஆகிய அழியாதப் புகழுடைய பாண்டியனின் பழமையான புகழுடைய குடியின் வழியில் தோன்றிய நல்லினது ஆயர்
இந்த ஆயர்கள் சிறந்த போர் வீரர்கள், அவர்களின் குடியும் பாண்டியன் குடியும் ஒரே குடியை அல்லது பரம்பரையைச் சேர்ந்தது. இப்பாண்டிய பேரரசின் வளர்ச்சிக்கும், பெருக்கத்திற்கும் இந்த ஆயர்களின் படையே காரணமாகும்.

பாண்டியர்கள் யாதவர்கள்


ஒரு தமிழ் புலவர் கீழ்கண்ட சிலேடைப் பாட்டால் பாண்டியர்கள் யாதவர்கள் என்பதனை விளக்குகிறார்.

"கோலெடுத்து கோத்துரத்தும் கோப்பாண்டி மன்னன்வடி
வேலெடுத்தும் கோத்துரத்தல் விட்டிலனே சால்மடுத்த
பூபாலனானாலும் போமோ புராதனத்திற் கோபாலனான குணம்".

பாட்டு விளக்கம்:

பாண்டிய மன்னனே! வேலாயுதம் கொண்ட பாண்டியனே! உன் எதிரிகளைத் தாக்குவதற்காக அவர்களைத் துரத்திக்கொண்டு வேலாயுதத்துடன் நீ பாய்ந்து செல்கிறாய். இதற்கு கரணம் உன் பரம்பரை புத்தி ஆதியிலே நீ ஆயர் குலத்தில் பிறந்தவன். எனவே மன்னனான பிறகும் கூட கோதுரத்தும் புத்தி உனக்குப் போகவில்லை

கடுங்கோன் பாண்டியன்

தமிழகத்தின் மீது சூறாவளி தாக்குதல்கள் நடத்தி வேங்கடம் முதல் குமரி வரை ஆக்கிரமித்து ஆட்சி புரிந்த களப்பிரர் என்பவர்களின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்ட பெருமை கடுங்கோன் பாண்டியருக்கு உண்டு.

4-ம் நூற்றாண்டு முதல் 6-ம் நூற்றாண்டு வரை தமிழகம் முழுவதும் தடுமாறச் செய்த இக்களப்பிரர் கன்னட நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது களப்பிரரது கொடுமைகளிலிருந்து தமிழகத்தை மீட்ட பெருமை கடுங்கோன் பாண்டியருக்கு உரியது. அவர் 590-620ல் அரசாண்டார். அவர் காலம் பாண்டியர் புத்துயிர் பெற்றனர்.

"All historiyans are agreed on the point that roughly.between the IV and VI centuries the new race of kalabhras took hold of the south throwing all the erstwhile rulership of the region into darkness and disrepute, so that when the velkudi grant of the later day pandya refers to the defeat effected by kadun kone over this race usurpers"

-nilakanta sasthiri.

பாண்டியர்


முல்லை நிலத்து ஆயர் பாண்டியர்களோடு பிறந்த குடியினர் எனக் கலித்தொகைக் கூறுகின்றது.

"மலிதிரை யூர்ந்து தன் மண்கடல் வெளவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார் நாடிடம் படப்
புலியோடு வில் நீக்கிப் புகழ் பொறித்த கிளர்க்கெண்டை
வலியினான் வணங்கிய வாடா சீர்த்த தென்னவன்
தொல்லிசை தட்ட குடியொடு தோன்றிய நல்லினத்தாயார்".

ஆதாரம்: கலித்தொகை முல்லைக்கலி

கடல்கோளினால் தன்னுடைய நிலப்பகுதி அழிவிற்கும் அஞ்சாது தம் பகைவர்களான சோழர்களையும் சேரர்களையும் முறியடித்து தனது "மீன்" கோடியை பொறித்த புகழையும், வலிமையையும், பகைவர்களை வணங்கச் செய்தவனும் ஆகிய அழியாதப் புகழுடைய பாண்டியனின் பழமையான புகழுடைய குடியின் வழியில் தோன்றிய நல்லினது ஆயர்
இந்த ஆயர்கள் சிறந்த போர் வீரர்கள், அவர்களின் குடியும் பாண்டியன் குடியும் ஒரே குடியை அல்லது பரம்பரையைச் சேர்ந்தது. இப்பாண்டிய பேரரசின் வளர்ச்சிக்கும்,பெருக்கத்திற்கும் இந்த ஆயர்களின் படையே காரணமாகும்.

முன்னோடி வீரன் அழகு முத்து கோன்"


          புரட்சித்தலைவி தமிழக முதல்வர் தங்கத்தாரகை விருது பெற்ற உலகம் போற்றும் உத்தம முதல்வர் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு
நன்றி நன்றி நன்றி
" இந்திய விடுதலைப் போரில்
இடுபட்ட அனைவருக்கும்
முன்னோடி வீரன் அழகு முத்து கோன்"
மாண்புமிகு முதல்வர் பெருமிதம்
15/3/1996. அன்று நடைபெற்ற வீரன் அழகு முத்துக் கோன் திருவுருவச் சிலை திறப்பு விழா மற்றும் வீரன் அழகு முத்து கோன் போக்குவரத்துக் கழக தொடக்க, விழாவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர், டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஆற்றிய உரையீன் ஒரு பகுதி
தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த யாதவர் இன மக்கள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் வசித்து வருகிறார்கள்.
இந்திய சுதந்திர வரலாற்றில் ஆரம்ப கால கட்டத்திலேயே மற்ற வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் ஒரு முன்னோடியாக விளங்கிய தங்களது குலத்தோன்றல் வீரன் அழகு முத்து கோன் அவர்களின் புகழுக்கு சிறப்புச் சேர்க்கப் படவில்லையே என்ற ஆதங்கம் அவர்கள் மனதில் நீண்ட நாட்களாக இருந்து வந்ததை நான் அறிவேன்.
அந்த மக்களின் ஆதங்கமும் மனக்குறையும் இன்று நீங்கிவிட்டது என்று அறியும்போது உள்ளபடியே நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்
நன்றி,
சுபாஷ் சேர்வை யாதவ்

சங்கரன் கோவில் மாவீரன் குருசாமி யாதவ், பி.எஸ்.சி




சங்கரன் கோவில் ஒன்றியப் பெருந்தலைவராகத் திகழ்ந்தவர். அப்பகுதிப் பால்பண்ணைத்தலைவர். மற்றும் பல பொறுப்புகள் வகித்தவர். உதவி என்று வந்தவர்களுக்கு முகம் சுழிக்காமல் உதவி செய்தவர். சிறு வயதுலேயே சமுதாய உணர்வு கொண்டவர்.யாதவர் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர். யாதவர் கல்லூரியில் படிக்கும்போதே இனப்பற்றும் எழுச்சியும் கொண்டு மாணவர்களுக்குத் தளபதியாக மதிக்கப்பட்டவர். அவரது சிற்றூராம் ஆட்க்கொண்டார்குளத்தில் யாதவர்கள் மட்டுமே வாழ்கின்ற பகுதியாகும். அடுத்துள்ள வீராணம் சிற்றூரில் தங்களை ஆதிக்கவாதிகளாக எண்ணிக்கொண்ட ஒரு வர்க்கத்தினர், யாதவர்களை நீண்ட காலமாகத் தொழில் துறையில் ஈடுபடவிடாமல், அடகுத் தொழில், அரசு தொடர்பான ஒப்பந்தங்களில் அவர்களே இருந்து ஆட்சி செய்தமை கண்டு-குருசாமி யாதவ் அவர்கள் சினங்கொண்டு பொங்கி எழுந்தார். அண்ணன் குருசாமி யாதவ் அவர்களை போலவே தொழில் செய்யவும், அரசு ஒப்பந்தங்களை பெறவும் தொடங்கினார். அண்ணன் குருசாமி யாதவ் தொட்டது எல்லாம் பொன்னாக மாறிய காலம் அது. 1996 ஆம் ஆண்டு அண்ணன் குருசாமி யாதவ் சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளராக தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றார். எங்கு சென்றாலும் எதிலும் அண்ணன் குருசாமிக்கு தான் முதல் மரியாதை. கொடிகட்டிப் பறக்கின்ற நம்மிடம் போட்டி போடத் தொடங்கி விட்டானே என்று ஒரு சாரார்க்கு மிகுந்த பொறாமை அடர்ந்தது. தீர்த்துக் கட்டத் திட்டம் தீட்டினர்! காவல் துறை எச்சரித்தும் அந்த அரிமா அஞ்சாமல் வலம் வந்தது. முப்பது பேர் கொண்ட கூலிப்படைக்குப் பல லட்சம் கொடுத்துப் பல மாதங்களுக்குப் பின்னர் அவர்களால் 20-07-2000 அன்று படுகொலை செய்யப்பட்டார். அவ்வீரனுடைய உயிர்தோழன் திரு.மாரியப்பன் அவர்களும், அவர்களோடு இணைந்து போராடியவரும் இன்னுயிர் நீத்த அவலம் நமது இதயத்தைக் கசக்கிப் பிழிகின்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு தளபதி ‘தீனதயாளன்’, நெல்லை மாவட்டத்தில் ஒரு குருசாமி. இன்னவருடைய ஆள்வினைத் திறம் நம்மை வியந்து நெகிழச் செய்கின்றது. மக்கள் தமிழ் தேசக் கட்சி உருவாவதற்கு அடித்தளம் அமைத்தவர். மதுரையம்பதியில் மாவீரன் அழகுமுத்து விழாவினை அரசு எடுத்துச் சிறப்பித்த போது 70 ஊர்திகளில் ஏழாயிரம் பேரைத் திரட்டி வந்தமை கண்டு வியந்து மாண்புமிகு பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் அவர்கள் அன்னாரைப் பாராட்டி விருது வழங்கினார். புகழுடம்பு எய்திய சாதனைச் இருவரும் நமது நெஞ்சத்தில் என்றென்றும் நிலைத்து நின்று நமக்குச் சமுதாயத் தொண்டின் இன்றியமையாமையினை உணர்த்துவார்கள்.

லிட்டில் ஹரியானா


‘ஜெய் ஜவான்,ஜெய்கிஷான்’ என முழங்கினார் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம்.நாட்டின் பாதுகாப்போ நம் முப்படையின் வசம். இவ்விரண்டிலும் நம்மவர் முன்னிற்கின்றனர் என்பதற்கோர் எடுத்துக்காட்டுத்தான் ‘லிட்டில் ஹரியானா’ எனப்படும் பெருமாள் தேவன்பட்டி.

வடபுலத்திலுள்ள ஹரியானா ‘அஹிர்’ எனப்படும் யாதவர் நிறைந்த மாநிலமாகும்.பாரதப்போர் நிகழ்ந்த குருஷேத்திரம் இம்மாநிலத்தில்தான் உள்ளது. 1857ல் சுதந்திரப் போராட்ட வீரர் ‘ராவ் துலாராம்’ வாழ்ந்த மண்ணும் இது தான். அம்மாநிலத்தில் வீட்டிற்கு ஒருவராவது இராணுவத்தில் பணிபுரிவார்கள். போரில் சிறந்த சேவை செய்பவர்களுக்கும் வீர மரணம் அடைந்தவர்களுக்கும் அளிக்கப்படும் வீரப்பதக்கம் பெறும் யாதவர்கள் இம்மாநிலத்தில் தான் அதிகம்.எனவே தான் தமிழகத்தில் யாதவ வீரர்கள் மிகுதியாகவுள்ள பெருமாள் தேவன்பட்டியும் லிட்டில் ஹரியானா என அழைக்கப்படுகிறது. பெருமாள் தேவன்பட்டி எழில் மிகுந்து காட்சி தரும் ஊராகும்

தமிழ்நாட்டு இடையன்களின் கிளைகள்


1.கரிகாலன் இடையன்

2.புதுநாட்டு இடையன்
3.சிவத்த இடையன்
4.கருத்த இடையன்
5.கல்லுகட்டி இடையன்
6.சாம்பார் இடையன்
7.அப்பச்சி இடையன்
8.செம்பலங்குடி இடையன்
9.தெலுங்கு இடையன்
10.உள்நாட்டு இடையன்
11.அரசன் கிளை இடையன்
12.வருதாட்டு இடையன்
13.பெரிய இடையன்
14.ஆட்டு இடையன்
15.சீவ இடையன்
16.புதுக்கண் நாட்டார் நம்பியார்
17.கருத்தமணி இடையன்
18.பால் இடையன்
19.மோர் இடையன்
20.நம்பி இடையன்
21.பாசி இடையன்
22.சிவார் இடையன்
23.கொள்ளு இடையன்
24.வடுக இடையன்
25.மொட்ட இடையன்
26.தலைப்பா கட்டு இடையன்
27.நாட்டு இடையன்
28.நார்கட்டி இடையர்
29.பால்கட்டி
30.பஞ்சாரம் கட்டி
31.சிவியர்
32.சோழியாடு
33.இராமக்காரர்
34.பூச்சுக்காரர்
35.கொக்கிக்கட்டி

Wednesday, 12 February 2014

தமிழ்நாடு யாதவ குல பட்டங்கள்:

1.சேதிராயர்
2.சேர்வைக்கரர்
3.மணியக்காரர், மணியம் 
4.அம்பலக்காரன், அம்பலம் 
5.தேவ் 
6.தேவர் 
7.புழியர் 
8.மலையமான் 
9.மிலாடுடையார் 
10.மந்திரி 
11.யாதவராயர் 
12.மன்றாயர் 
13.பண்டாரம் 
14.பொதுவர் 
15.கரையாளர் 
16.போவண்டர் 
17.அண்டர் 
18.ஆய் 
19.தாஸ் 
20.பிள்ளை 
21.விருஷ்ணி 
22.உடையார் 
23.ராயர் 
24.கீதாரி 
25.வேள் 
26.வானரவீரர்
27.கோன் 
28.கோனார் 
29.கருநந்தன் 
30.இரயேந்திரன்
31.இடையர் 
32.தோதுவார் 
33.கோவலன் 
34.நம்பியார் 
35.கௌரா 
36.மேயர் 3
7.முனியன் 
38.எருமன் 
39.ஆயர் 
40.வடுக இடையர் 
41.நாயுடு 
42.கொல்லா 
43.நாயக்கர் 
44.கரம்பி 
45.முல்லையர் 
46.கோவிந்தர் 
47..ஆன்வல்லவர் 
48.குடவர் 
49.பாலர் 
50.அமுதர் 
51.தொறுவர் 
53.குறும்படை 
54.முக்கந்தன் 
55 மன்னாரிடையர் 
56. குறும்பர் 
57.குறும்ப இடையர் 
58.குறும்பொறை நாடன்

Sunday, 9 February 2014

ராமுக்கோன்

சிவகங்கை சீமையின் பாளையக்காரர் மருதுபாண்டியர்களின் படையில் வீரனாக இருந்தவர் ராமுக்கோன். உருவாட்டி அருகே அம்பலார் ஒருவர் ஆட்டு மந்தை வைத்துளார். அவரின் மந்தையில் தினமும் ஒரு ஆடு காணாமல் போய்விடுமாம் அம்பலாரால் எப்படி காணாமல் போகிறது என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. அதனால் அவர் மருதுபாண்டியரை சந்தித்து முறையிட்டார்.மருதுபாண்டியர் உடனே அம்பலாரே கவலைவேண்டாம் கோனாரை அனுப்புகிறேன் போய்வாருங்கள் என்றார். அன்று இரவு கோனார் அவர்கள் ஆட்டு மந்தையில் காவலில் இருந்தார். திடீரென்று ஒரு கரடி ஆட்டை தாக்கியது உடனே கோனார் சீறி பாய்ந்து கரடியிடம் சண்டையிட்டு அதனின் தலையை வெட்டி எடுத்தார். மருதுபாண்டியர் சென்று இந்த மிருகம்தான் ஆட்டை பிடித்து உண்கிறது என்றார். மருதுபாண்டியர் மிரன்டு போனார். கரடியின் தலையை வெட்டி எடுத்து வந்து சாதாரணமாக சொல்கிறாரே என்று கோனாரை பாராட்டியதோடு மட்டும் அல்லாமல் அவர்கள் கட்டிய காளையார்கோயிலில் இராஜகோபுரத்துக்கு முன்பு கரடியுடன் கூடிய ராமுக்கோன் சிலையை நிருவினார். அந்த சிலை இன்றும் உள்ளது.

கார்மேகக் கோனார்



     


கார்மேகக் கோனார் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகத் திகழ்ந்தவர். தமிழிலக்கிய, இலக்கணத்தைக் கசடறக் கற்பிப்பதில் வல்லவர். தமிழறிஞர். சொற்பொழிவார். எழுத்தாளர்.

பிறப்பு:

கார்மேகக் கோனார் 1889ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அகத்தாரிருப்பு என்னும் சிற்றூரில் பிறந்தவர்.

பணி:

மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறையில் 37 ஆண்டுகள் பணியாற்றியவர். அங்கு இவரிடம் தமிழ் கற்றவர்களில் குறிப்பிடத்தக்க சிலர்:

இவர், சென்னைப் பல்கலைக் கழகப் பாடத் திட்டக் குழுவில் தொடர்ந்து 21ஆண்டுகள் தலைவராக இருந்தார்.

ஆக்கங்கள்:

இவர் பின்வரும் நூல்களை இயற்றி இருக்கிறார்:
  1. அறிவு நூல் திரட்டு (2 தொகுதிகள் - உரைநூல்)
  2. ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன் (உரைநூல்)
  3. இதிகாசக் கதாவாசகம் (2 தொகுதிகள்)
  4. ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்
  5. ஒட்டக்கூத்தர்
  6. கண்ணகி தேவி
  7. காப்பியக் கதைகள்
  8. கார்மேகக் கோனார் கட்டுரைகள்
  9. கார்மேகக் கோனார் கவிதைகள்
  10. செந்தமிழ் இலக்கியத்திரட்டு I
  11. பாலபோத இலக்கணம்
  12. மதுரைக் காஞ்சி
  13. மலைபடுகடாம் ஆராய்ச்சி
  14. மூவருலா ஆராய்ச்சி
  15. தமிழ்ச்சங்க வரலாறு (கட்டுரை)
  16. தமிழ்மொழியின் மறுமலர்ச்சி
  17. நல்லிசைப் புலவர்கள் (உரைநூல்

அகில இந்திய யாதவ குல பட்டப் பெயர்கள்


அகில இந்திய யாதவ குல பட்டப் பெயர்கள்

இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரவியிருக்கும் ஒரே இனம் நம் யாதவ இனம். ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு பெயர்களால் நாம் அழைக்கப்படுகிறோம். அந்த மாநில வாரியான பட்டியலை நாம் கீழ் காண்போம்.

தமிழ்நாடு :
1. கோனார்
2. பிள்ளை
3. இடையர்
4. கோன்
5. யாதவன்...
6. கரையாளர்
7. மந்திரி
8. அம்பலம்
9. தாஸ்
10. தோதுவார்
11. கரம்பீ
12. கோலயன்
13. ஆயர்
14. வடுக இடையர்
15. நம்பியார்
16. நாயுடு
17. கொல்லா
18. கொளர
19. மேயர்
20. முனியன்
21. எருமன்
22. வடுக ஆயர்
23. உடையர்
24. நாயக்கர்

போன்ற பட்டம் பெற்றவர் உள்ளனர்.

கோவா :
25. யாதாவா
26. அகிர்
27. குவாலி
28. கோப்

ஆந்திரா :
29. சூசித்தி
30. டோக்ரா
31. பரக்கிரிடி
32. துமதுல்லா
33. கொல்லா
34. கிருஷ்ணசொல்லா
35. நமி
36. போயன்னா
37. பிரசத்துன்னா
38. கோனே
39. குணட்டு
40. ஈட்டி
41. கொளரா நாயுடு
42. தனங்கா
43. குருபா
44. குறுவா
45. யெரங்கலா
46. ரெட்டி
47. ராவ்
48. ரெட்டியா
49. சுவாமி
50. வஹல்லா
51. பின்யாட்டி

அஸ்ஸாம் :
52. கோவாலா
53. கோப்
54. கோஷ்
55. கோல்

பீகார் :
56. யாதவா
57. அகிர்
58. கோடி
59. சடகோப்
60. கோசி
61. சபாசி
62. கோயாரியா
63. சபால்கோப்
64. மஜராவுட்
65. கிஷ்வந்த்கோரியா
66. மண்டல்
67. பகாட்
68. மேதோ
69. லொடவாயன்
70. மன்ஜிகி
71. ராப்ரி
72. ஜாதோயன்
73. ராஜ்
74. ரேவாட்
75. நந்தினயா
76. சுதாமாஸ்
77. சோலன்கி
78. ஜடேஜா
79. தாகீர்ராஜ்

சண்டிகர் :
80. அகிர்
81. குவாலா
82. சிங்யாதவ் சிங்
83. கோவாலா
84. ராவ்
85. யாதவா

பஞ்சாப் :
86. அகிர்வாலா
87. தூத்வாலா
88. சிங்
89. அட்டரி

மத்திய பிரதேசம் :
90. நசீரா
91. நாகா
92. நயன்
93. நுன்கா
94. செடுர்
95. சோனரவானி
96. சரபா
97. சரவஹிரா
98. சன்டாடா
99. சோனா கென்சா
100. சாச்சன்
101. சவுத்திரி
102. சண்டா
103. சந்தாரிய
104. பேஷன்
105. பகவகா
106. பார்ச்சா
107. பேஷ்ரா
108. பனிச்சாரியா
109. பான்டோங்க்ரி
110. பேகர்
111. பங்ரயில்
112. பனிஷா
113. போன்டி
114. மராசங்கர்
115. பூசாரி
116. கருடா
117. குன்ஷா
118. குலவன்ஷி
119. கோஷி
120. மங்கர்
121. மாகர்ஷ்
122. பஹாரி
123. மன்கர்
124. மத்தவிகாரிகா
125. பரதான்
126. பட்டேல்பட்டேலா
127. பஞ்சோட்டி

கர்நாடகா :
128. கொல்லா129. கொவுலி130. கோபால்131. யாதாவா132. ஆஸ்தானகொல்லா
133. அடவிகொல்லா134. கோபால்135. கோபாலி136. ஹனபரு
137. கிருஷ்ண கொல்லா138. அனபரு139. அட்டான்ஹரு140. ஹன்பர்
141. துதிகிகோலா142. கொனடா143. யதுகொல்லா144. கோண்ட்ஸ்145. தெலுகுகொல்லா146. ஹனம்கொல்லா147. கெங்குரிகொல்லாட

கேரளா :
148. இடையன்149. இருமன்150. ஊருளிநாயர்151. கோலயா152. மணியானி
153. கிருஷ்ணவாகா154. பிள்ளை155. நம்பி156. நம்பியார்

மேற்குவங்காளம் :
157. ஆசிர்158. கொல்லா159. கோபா160. சடகோபா161. கோஷ்162. யாதாவா
163. மண்டலா164. பலா165. தாஸா166. மேத்தோ167. மரிகா168. பட்டாக்
169. குருமேத்தா170. பகாட்

உத்திரபிரதேசம் :
171. அகிர்172. கோஷி173. யதுவன்சி174. யாதாவா175. கோளசி176. குஜார்
177. குணக்கேனியா178. தந்தரோகி179. கட்டி180. கோமலா181. சடோசட்ஜா
182. ரஜோரியா183. ரேவாட்184. வில்கர்185. சோபர்186. பதான்
187. பிரதான்188. லாலா189. தேஷ்வாலி190. கணுஜியா191. மகரேவியா192. புருலீயா
193. மொகமதுன்கோசி194. பெஹாலா195. சவுத்திரி196. கவுர்197. செய்யட்
198. டோமர்199. துருக்-நந்தவன்சி200. துனர்201. கட்டாரியா202. போரியி
203. பன்வார்204. பனியா205. ராம்வன்சா206. குலவன்சா207. திதிம்வார்
208. குஜார்ஸ்209. பகாராவதியா

ஒரிசா :
210. பரதான்211. கோலா212. தாஜி213. தாசீர்214. ரேவாட்215. கொல்லா
216. குருமாட்டுஹ217. கோப்218. பிள்ளை219. கோணார்220. பன்னுகொல்லா
221. பலா222. புத்தியா223. ரேவாட்224. பாரவாட்

குஜராத் :
225. அகிர்226. ஆயர்227. புரோச்சா228. யாதவ்

மகாராஷ்ட்ரா :
229. அகிர்230. தும்மல்231. தாகி232. மகாடிக்233. வாலா234. பிபிரி235. சிலி
236. மிராகல்237. கேட்238. யாதாவ்239. கொல்லா240. பன்வார்241. சிந்தி242. சின்டே
243. நேட்244. பனாபிஸ்

ராஜாஸ்தான் :
245. அகிர்246. யாதவ்247. கோப்
டெல்லி :
248. யாதவ்249. அகிர்250. கோவாலா251. கோப்252. அயர்253. சிங்கபரோச்சா

தொண்டைமான்கள் யார்?


தொண்டைமான்கள் யார்?

தொண்டைமண்டலத்தை  24 கோட்டங்களாகப் பிரித்து குறும்ப இடையர் என்ற யாதவ  மரபினரே ஆண்டு வந்தார்கள் இவர்களே பல்லவர் எனப்பட்டனர். பிற்காலத்தில்  வலிமை குன்றி இராமநாதபுரத்துக்கு கட்டுப்பட்டு  புதுகோட்டையை ஆண்டு வந்தனர்

கி.பி. 1671-1710 முதல் இராமநாதபுரத்தை ஆண்ட கிழவன் சேதுபதி அதுசமயம்  புதுகோட்டை மன்னராக  இருந்த பல்லவராயன் என்பவரை நீக்கிவிட்டு, அதற்க்குப் பதில் தனது ஆசை நாயகியான கள்ளர் இனது நங்கை காத் ஆய் என்பவளின் சகோதரர் ரகுநாதன் என்பவனை புதுகோட்டை மன்னராக்கினார். இவரே தொண்டைமான் என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டார். எனவே ஆதியில் புதுகோட்டை தொண்டைமான்கள் யாதவர்கள் என்பது தெளிவாகிறது.

NOTE: 

In ancient times a nomadic shepard class abandoned it's wanderings and settled around kanchi and it's neighbourhood, destroyed the forests, converted them into fertile lands, made many adminstrative divisions or kottam's. from this sheppard class or kurumbas emerged great pallavas 

-Views of elliot sevol  

ஆராய்ச்சியாளராகிய எலியட் செவேல் முதலியோர் 'தொண்டைமண்டலத்துப் பழங்குடியினரான குறும்பர் மரபினரே பிற்காலப் பல்லவர்' என்றும் முடிவு செய்தனர். குறும்பர் ஆடுமாடுகளை மேய்ப்பவர். இதனைக் கருத்திற் கொண்டு. பால்-அவர் (பால் கறப்பவர் - குறும்பர்) என்பதே பல்லவர் எனத் திரிந்திருக்கலாம் என முடிவு செய்தவரும் சிலராவர்.

மணிமேகலையில் கூறப்படும் ஆதொண்டச்சக்கரவர்த்தி குறும்பரை வென்று அவர் தம் குறும்பர் பூமியைத் தனதாக்கி தன் பெயர் இட்டு தொண்டைமண்டலம் என வழங்கினான்' என்பது செவிவழி வரும் செய்தியாகும். இது முன்னரே கூறப்பட்டது

யாதவர்களுக்கு குறும்பொறை நாடன்  என்ற பட்டமும் உள்ளது. குறும்பு என்றால் காடு என்று பொருள். காடும் காடு சார்ந்த பகுதில் வாழ்ந்த முல்லை நில மக்களான குறும்ப இடையர் பிற்காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை வழியாக  ஆந்திரா கர்நாடக போன்ற பகுதிக்கு சென்று வாழ்ந்தனர்.

நன்றி
சுபாஷ் சேர்வை யாதவ்

இடையன் சேந்தன் கொற்றனார்


இடையன் சேந்தன் கொற்றனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்றுஅகநானூறு 375ஆம் பாடலாக (பாலைத் திணை) இடம் பெற்றுள்ளது. ஆடுமாடு மேய்க்கும் முல்லைநில மக்களை ஆயர் என்றும் இடையர் என்றும் கூறுவர். இந்தப் புலவர் முல்லை நிலத்தவர் என்பதை அவரது பெயரால் அறியலாம்.
கொற்றனார் என்பது புலவரின் பெயர். இவரது தந்தையின் பெயர் சேந்தன். சேந்தன் கொற்றனார் என்னும் தொடர் சேந்தன் மகன் கொற்றனார் என்னும் பொருளைத் தரும்.
இந்தச் சேந்தன் காவிரிக்கரை ஆர்க்காட்டை ஆண்ட அழிசி என்பவனின் மகன். புள்ளிப்பள்ளம் போட்ட வேலைக்கொண்டு இந்தச் சேந்தன் பகைவர் பலரை வென்றவன்.

பாடல் தரும் செய்தி

அவன் பிரிந்து சென்றான். அவள் உள்ளமும் உடலும் சோர்ந்து வேறுபட்டாள். தோழி தேற்றினாள். அவள் தேறுதல் பெறாமல் தோழியிடம் சொல்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
வழியில் செல்வோரின் கையில் எந்தப் பொருளும் இல்லை என்றாலும், கல்லா இளையர் தம் அம்பு தொடுக்கும் வில்லாண்மையை அறிந்துகொள்ளும் பொருட்டு அவர்கள்மீது அம்பை எய்து கொன்று எருவை என்னும் பெருங்கழுகளுக்கு உணவாக ஊட்டுவர். அந்த வழியில் அவர் செல்கிறாரே என்று கவலைப்படுகிறேன்.

வரலாறு

அவர் பாழிநகர்க் காட்டைத் தாண்டிச் சென்றிருக்கிறார். பாழி செம்பாலானது போன்ற கோட்டையை உடையது. ஒருமுறை அந்தக் கோட்டையைச் சோழ அரசன் இளம்பெருஞ்சென்னி அழித்தான். அதனால் அவ்வூர் அரசனும் வேற்று நாட்டவருக்கு உதவமாட்டான். எனவே அஞ்சுகிறேன் - என்கிறாள் அந்தத் தலைவி.

இடையன் நெடுங்கீரனார்


இடையன் நெடுங்கீரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவர் பாடியதாக ஒரே ஒரு பாடல் சங்கநூல் தொகுப்பில் உள்ளது, அது அகநானூறு 166ஆம் பாடலாக அமைந்துள்ளது. இவர் ஆடுமாடு மேய்க்கும் முல்லை நிலத்து மக்களில் ஒருவர் ஆதலால் இடையன் என்னும் அடைமொழி இவரது பெயருக்கு முன் அமைந்துள்ளது.

பாடல் தரும் செய்தி

பரத்தையொடு காவிரியாற்றில் அவன் நீராடினான். தலைப்புணை என்று சொல்லப்படும் முன்னோடிப் பரிசலில் சென்று நீராடினான். தன் வீட்டுக்கு வந்தவுடன் தன் மனைவியிடம் ஊரார் சொல்வது போல அப்படி நான் நீராடவே இல்லை என்று தெய்வத்தின்மீது சத்தியம் செய்கிறான். நான் சொல்வது பொய் ஆயின் வேளூர்வாயில் தெய்வம் என்னைப் பலியாகப் புடைத்து உண்ணட்டும் என்று கூறிச் சத்தியம் செய்கிறான். (சங்ககாலத்து வேளூர் வாயில் இக்காலத்தில் புள்ளிருக்கு வேளூர் என்னும் பெயருடன் விளங்குகிறது.)
இதனைக் கேள்வியுற்று அவனுடன் நீராடிய பரத்தை அவன் சொல்வது உண்மையாயின் தன்னுடன் நீராடியது யார் என்று கேட்டு அவனது நடிப்பை ஏளனம் செய்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.