Friday, 14 February 2014

கலித்தொகை கூறும் பாண்டியர்கள்

முல்லை நிலத்து ஆயர் பாண்டியர்களோடு பிறந்த குடியினர் எனக் கலித்தொகைக் கூறுகின்றது.

"மலிதிரை யூர்ந்து தன் மண்கடல் வெளவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார் நாடிடம் படப்
புலியோடு வில் நீக்கிப் புகழ் பொறித்த கிளர்க்கெண்டை
வலியினான் வணங்கிய வாடா சீர்த்த தென்னவன்
தொல்லிசை தட்ட குடியொடு தோன்றிய நல்லினத்தாயார்".

ஆதாரம்: கலித்தொகை முல்லைக்கலி

கடல்கோளினால் தன்னுடைய நிலப்பகுதி அழிவிற்கும் அஞ்சாது தம் பகைவர்களான சோழர்களையும் சேரர்களையும் முறியடித்து தனது "மீன்" கோடியை பொறித்த புகழையும், வலிமையையும், பகைவர்களை வணங்கச் செய்தவனும் ஆகிய அழியாதப் புகழுடைய பாண்டியனின் பழமையான புகழுடைய குடியின் வழியில் தோன்றிய நல்லினது ஆயர்
இந்த ஆயர்கள் சிறந்த போர் வீரர்கள், அவர்களின் குடியும் பாண்டியன் குடியும் ஒரே குடியை அல்லது பரம்பரையைச் சேர்ந்தது. இப்பாண்டிய பேரரசின் வளர்ச்சிக்கும், பெருக்கத்திற்கும் இந்த ஆயர்களின் படையே காரணமாகும்.

No comments:

Post a Comment