சிவகங்கை சீமையின் பாளையக்காரர் மருதுபாண்டியர்களின் படையில் வீரனாக இருந்தவர் ராமுக்கோன். உருவாட்டி அருகே அம்பலார் ஒருவர் ஆட்டு மந்தை வைத்துளார். அவரின் மந்தையில் தினமும் ஒரு ஆடு காணாமல் போய்விடுமாம் அம்பலாரால் எப்படி காணாமல் போகிறது என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. அதனால் அவர் மருதுபாண்டியரை சந்தித்து முறையிட்டார்.மருதுபாண்டியர் உடனே அம்பலாரே கவலைவேண்டாம் கோனாரை அனுப்புகிறேன் போய்வாருங்கள் என்றார். அன்று இரவு கோனார் அவர்கள் ஆட்டு மந்தையில் காவலில் இருந்தார். திடீரென்று ஒரு கரடி ஆட்டை தாக்கியது உடனே கோனார் சீறி பாய்ந்து கரடியிடம் சண்டையிட்டு அதனின் தலையை வெட்டி எடுத்தார். மருதுபாண்டியர் சென்று இந்த மிருகம்தான் ஆட்டை பிடித்து உண்கிறது என்றார். மருதுபாண்டியர் மிரன்டு போனார். கரடியின் தலையை வெட்டி எடுத்து வந்து சாதாரணமாக சொல்கிறாரே என்று கோனாரை பாராட்டியதோடு மட்டும் அல்லாமல் அவர்கள் கட்டிய காளையார்கோயிலில் இராஜகோபுரத்துக்கு முன்பு கரடியுடன் கூடிய ராமுக்கோன் சிலையை நிருவினார். அந்த சிலை இன்றும் உள்ளது.
No comments:
Post a Comment